{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pwwsstsw/", "data": {"id": "pwwsstsw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pwwsstsw/", "kind": "article", "headword": "ஆமன்", "romanization": "āmaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.927856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆமன் கிரீசைச் சேர்ந்த தீப்ஸ் நகரில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுள்.", "body_ta": "ஆமன் கிரீசைச் சேர்ந்த தீப்ஸ் நகரில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுள். கார்னாக்கிலுள்ள கோவிலிலும் இவர் வடிவமேயிருக்கிறது. இக்கடவுளே பண்டைய எகிப்தியர்களுக்கும் கடவுள். அவர்கள் இக்கடவுளைச் சூரியனாகக் கருதி வழிபட்டதுண்டு. சாதாரண மனிதர்களைப்போல இக்கடவுளுக்கு உருவம் அமைக்கப்பட்டது. லிபியா பாலைவனத்தில் இவருக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்தது. இவருக்கு உரிய வாகனம் ஆடு. இக்கடவுளின் மனைவி பெயர் முட் என்பது. எகிப்திய மன்னர்கள் இக்கடவுளின் சம்மதம் பெற்றே அந்நாட்டை யாண்டு வந்ததாகக் கருதினார்கள். இதையொட்டியே எகிப்தை வென்ற மகா அலெக்சாந்தரும் ஆமன் கோவிலுக்குச் சென்று வந்தார். தே. வெ. ம.]]"}}