{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pqkf4tye/", "data": {"id": "pqkf4tye", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pqkf4tye/", "kind": "word", "headword": "ஆவண மையமானது", "romanization": "āvaṇa maiyamāṉatu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.794210+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒர் இயக்க முறை மையின் பண்புக்கூறு ஆகும்.முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மையமாகக் கொண்டவை.அதாவது,ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பைத் திறக்க வேண்டும். பிறகு அதனுள்ளேதான் ஆவணத்தைத் திறக்க வேண்டும்.ஆனால் இப்போதுள்ள மெக்கின்டோஷ்,விண்டோஸ் இயக்க முறைமைகளில் ஒர் ஆவணத்தைத் திறப்பதற்குக் கட்டளை தந்தால் போதும்.அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே ஆவணம் திறக்கப்படும்.எடுத்துக்காட்டாக,விண்டோஸ் இயக்கமுறைமையில் எம்எஸ்வேர்டு தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணத்தை சுட்டியால் இரட்டை கிளிக் செய்து திறந்தால்,வேர்டு தொகுப்பு,தானாகவே திறக்கப்பட்டு அதனுள்ளே வேர்டு ஆவணம் திறக்கப்படும்.ஒர் ஆவணம் எந்தத் தொகுப்பில் உருவாக்கப்பட்டது என்பதை அறியாமலே அந்த ஆவணத்தைப் பயனாளர் திறக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "document centric", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 154"}]}}