{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pftfbddp/", "data": {"id": "pftfbddp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pftfbddp/", "kind": "article", "headword": "அசென்ஷன் தீவு", "romanization": "aceṉṣaṉ tīvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.980326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் அட்லான்டிக் கடலில் செயின்ட்ஹெலினா தீவிற்கு 700 மைல் வடமேற்கேயுள்ள எரிமலைத் தீவு.", "body_ta": "தென் அட்லான்டிக் கடலில் செயின்ட்ஹெலினா தீவிற்கு 700 மைல் வடமேற்கேயுள்ள எரிமலைத் தீவு. இத்தீவைச் சுற்றியுள்ள கடலில் பலவகை மீன்களும், ஆமைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. தீவில் முயல்களும், காட்டாடுகளும் காணப்படுகின்றன. இத்தீவை முதல் முதலில் போர்ச்சுகேசியர்கள் 1501-ல் அசென்ஷன் தினத்தன்று கண்டுபிடித்ததால் இது இப்பெயர் பெற்றது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இத்தீவு 1815-ல் நெப்போலியன் செயின்ட் ஹெலினுவிற்கு வந்த பின் ராணுவ முறையில் வலுப்படுத்தப்பட்டது. சுமார் 200 மக்களே இத்தீவில் வசிக்கின்றனர்."}}