{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pfsqndtp/", "data": {"id": "pfsqndtp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pfsqndtp/", "kind": "article", "headword": "இந்தியாவில் டேனர்", "romanization": "intiyāvil ṭēṉar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.703902+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.", "body_ta": "1616-ல் டேனருடைய கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. அப்போது தஞ்சையிலிருந்த மன்னரான இரகுநாத நாயக்கர் 1620 ல் டேனர் தரங்கம்பாடியில் வியாபார நிலையம் ஏற்படுத்திக் கொள்வதையனுமதித்தார். அவர்கள் வங்காளத்தில் சேரம்பூர் என்னுமிடத்தில் 1676-ல் ஒரு நிலையம் ஏற்படுத்திக் கொண்டனர். 1845-ல் இவ்விரு இடங்களையும் ஆங்கிலக் கிழக்கிந் தியக் கம்பெனிக்கு 12½ இலட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். தே. வெ. ம.]]"}}