{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pff2ar7k/", "data": {"id": "pff2ar7k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pff2ar7k/", "kind": "article", "headword": "அலெக்சாந்தர், ஆறாம்", "romanization": "alekcāntar, āṟām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.680135+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அலெக்சாந்தர் என்னும் பெயருள்ள பெயருள்ள போப்பாண்டவர்களுள் இவரே தலைசிறந்தவர்.", "body_ta": "அலெக்சாந்தர் என்னும் பெயருள்ள பெயருள்ள போப்பாண்டவர்களுள் இவரே தலைசிறந்தவர். இவரை ஆறாம் அலெக்சாந்தர் என்பர். கி.பி. 1413–இல் இசுபெயினிலுள்ள வாலன்சியாவிற்கு அருகிலுள்ள உரோட்ரிகோ லேன்கோல் (Rodrigo Lan Col) என்னுமிடத்தில் பிறந்தார். மூன்றாம் காலிக்சுடசு (Calixtus–III)வின் மருமகனானார். இவர் வழக்காடுவதிலும் ஆட்சித் திறமையிலும் சிறந்த திறமை பெற்றவர். மூன்றாம் காலிக்சுடசு இவரைக் கார்டினலாக நியமித்தார். ஆறாம் இன்னசன்ட் என்பவர் கி.பி. 1492–இல் இறந்ததும் அலெக்சாந்தர் போப்பு ஆனார். சவனரோலா என்னும் பிளாரன்சின் சமய உரையாற்றுபவர் இவரை எதிர்த்ததால், கி.பி. 1498-இல் போப்பு அலெக்சாந்தர் சவனரோலாவைக் கொல்லும்படி செய்தார். பேரறிவும் துணிச்சலும் மிக்க இவர் உரோமாபுரியை அழகுபடுத்தினார். கல்வியையும் கலைகளையும் வளர்த்தார். திருச்சபையின் வருமானம் இவரது காலத்தில் அதிகரித்தது. அமெரிக்காவிலிருந்த இசுபெயின் (Spain) போர்த்துகீசிய குடியேற்றங்களுக்கிடையே நில எல்லையை வகுத்தார். இவர் தம் இரு புதல்வர்கள் சீசர் போர்சியா (Cesaure Borgia) உலுக்ரிசியா (Lucrezia) பெரும்புகழ் பெற்றவர்களாவர்."}}