{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pf7zmbv9/", "data": {"id": "pf7zmbv9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pf7zmbv9/", "kind": "article", "headword": "ஆதன்சன், மைக்கல்", "romanization": "ātaṉcaṉ, maikkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.281624+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதன்சன், மைக்கல் (1727-1806) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி.", "body_ta": "ஆதன்சன், மைக்கல் (1727-1806) பிரெஞ்சு இயற்கை விஞ்ஞானி. பிரயாணிகர். தாவரவியலில் நூல்கள் இயற்றியிருக்கிறார். முதன்மையாக ஆப்பிரிக்காவிலுள்ள செனிகால் நாட்டு இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பயோபாப் (த.க.) என்னும் பெரிய ஆப்பிரிக்காக் கண்டத்து மரம் இவர் பெயரால் ஆதன்சோனியா என்று அழைக்கப்படுகிறது. இவர் தாவரங்களை ஒரு நல்ல புதிய முறையில் பாகுபடுத்தித் தாவரங்களின் இயற்கைக் குடும்பங்கள் (Les Familles Naturelles des Plantes) என்று ஒரு நூல் 1743-ல் வெளியிட்டார்."}}