{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pahg3tke/", "data": {"id": "pahg3tke", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pahg3tke/", "kind": "article", "headword": "நொதி உற்பத்தி, தொழிலக", "romanization": "noti uṟpatti, toḻilaka", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.226510+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தொழிலக அளவில் பயன்படும் நொதிகள் குளூக்கோஸ், ஐசோமரேஸ் போன்ற தூய படிகங்கள் முதல் பாக்ரியாட்டின் எனும் உலர்ந்த, தூளாக்கப்பட்ட திசு வரை பல வகைப் பட்டவை.", "body_ta": "தொழிலக அளவில் பயன்படும் நொதிகள் குளூக்கோஸ், ஐசோமரேஸ் போன்ற தூய படிகங்கள் முதல் பாக்ரியாட்டின் எனும் உலர்ந்த, தூளாக்கப்பட்ட திசு வரை பல வகைப் பட்டவை. குளூட்டரால்டிஹைடு கொண்டு நிலை நிறுத்தப் பட்ட முழு நுண்ணுயிர்ச் செல்களும் இவற்றிலடங்கும். விலங்கின,பயிரின, நுண்ணுயிரின நொதிகள் அனைத்திற்கும் நொதித் தயாரிப்பு முறை பொதுவானதே.\n\nசெல் புற (extra cellular) நொதிகள் பொதுவாக நீராற்பகுப்பு வகையைச் சார்ந்தவை. அத்தி மரச் சாறிலிருக்கும் ஃபிசின் (ficin) எனும் புரோட்டியேசும், பப்பாளி மரப் பாலிலுள்ள பாப்பயினும், வயிற்றுச் சுரப்பு நீர்மத்திலுள்ள பெப்சினும் இவ்வகையைச் சார்ந்தவையே. நுண்ணுயிர் (நீராற்பகுப்பு) நொதிகள் செல்களால் சுரக்கப் பட்டு, ஒரு வளர் ஊடகத்திற்கு மாற்றப் படுகின்றன. (லாக்டேஸ் , அமைலேஸ், புரோட்டி யேஸ், பெக்டினேஸ்) அமைப்பு. நொதிகள் சில செல்களால், முறை தவறாது சுரக்கப் படுகின்றன. இவை செல்லின் நிறையுடன் நெருங்கிய தொடர்புடையவை. குறிப்பிட்ட தூண்டலின் விளைவாகத் தோன்றும் நிலைக்கேற்பத் தழுவும் (adaptive) நொதி குளுக்கோஸ் ஐசோமரேஸ் போன்றவை மற்றொரு வகையைச் சார்ந்தவை.\n\nநொதி செறிந்த பொருளைத் தயாரித்தலும், சேகரித்தலும் தொழிலக அளவில் செம்மைப் படுத்தப் பட்டுள்ளன. விலங்கின நொதிகள், குறிப்பிட்ட உறுப்புகளிலிருந்து உண்டாக்கப் படுகின்றன. சிறு விலங்குகளின் தொண்டைச் சுரப்பிகளில் தோன்றும் லிபேஸ், கணையத்திலிருந்து சுரக்கப் படும் பாங்க்கிரியாட்டின், குருதிச் சுற்றோட்டத்திலேயே உறை கட்டியைக் கரைக்க வல்லதும், மனிதச் சிறுநீரிலிருந்து பிரித்தெடுக்கப் படுவதுமான யூரோகினேஸ் ஆகியன, ஊடக முதிர்வு நிலை ஆகியன பற்றிய தீவிர கவனம் தேவை. வளர்ச்சி வட்டத்தில் எக்கட்டத்தினால், நொதி விளைச்சல் உயர்கிறது என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. குறிப்பிட்ட வளர் சிதை மாற்றிகளைச் சேர்த்தோ, அகற்றியோ நொதி விளைச்சலைக் கூடுதலாக்க இயலும்.\n\nநீரில் அமிழ்ந்த பண்ணைச் சாதன உத்திக்குப் பயன் படும் நொதிப்பிகளின் (fermenters) கொள்ளளவு 10–200மீ³ என்னும் வரம்பில் அமைந்துள்ளது. நுண்ணுயிர் எதிர் மருந்துத் (antiobiotics) தயாரிப்புக்குத் தொழிலக அளவில் தயாரிப்பதற்கு ஏற்றதன்று எனக் கருதப் படும் நொதிக் கருவிகள் நொதித் தயாரிப்பில் கையாளப் படுகின்றன. நுண்ணுயிர் வழி நொதிகளைத் தயாரிப்பதற்குப் பயனாகும் உயிரிகள் நிலைத் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். உயிரிகளின் தேர்வும், வளர்ச்சியும், நொதி விளைச்சலை அறுதியிடும் காரணி களாகும். இவற்றில் தகுந்த கவனம் செலுத்தினால், நொதி விளைச்சலைப் பல்லாயிரம் மடங்கு உயர்த்தலாம். முன்னாளில், வணிக அளவில் முதன்மையாகத் தேவைப் பட்ட நொதி வகைகள் இயற்கையில் கிடைக்கும் வளர் ஊடகங்களிலிருந்து, தக்க ஆய்வுக்குப் பின் பிரித்தெடுக்கப் பட்டன. சில நேரங்களில், தக்க ஊட்டச் சத்துகளைக் கொண்டு, செய்முறைகள் திருத்தியமைக்கப் பட்டதும் உண்டு. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்டரனேஸ் தயாரிக்கும் உயிரியை விளைவிக்கும் தனி ஊடகத்தில் டெக்ஸ்ட்ரான் மட்டுமே கார்பன் மற்றும் ஆற்றல் தோற்றுவாயாகும். இயற்கையிலிருந்து நொதித் தேர்வு செய்யும் முறையில் செய்யப் பட்டுள்ள சிறப்புத் திருத்தமொன்றின் படி, கதிர் வீச்சு அல்லது வேதிப் பொருளைப் பயன் படுத்தித் தேவைக்கேற்ப மாறு பட்ட உயிரினங்களை (mutants) உருவாக்கி, அவற்றை ஆய்வு செய்வர். அண்மைக் காலத்தில், மரபு சார் பொறியியலில் (genetic engineering) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட நொதியைத் தயாரிப்பதற்கு உதவும் மரபிகளின் (genes) உற்பத்தியை இரட்டிப்பாக்கும் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.\n\nநொதிகள் யாவுமே நொதி மலினம் பெற்ற இயற்கைப் பொருள்களிலிருந்து பிரிக்கப் படுவதில்லை. அமைலேஸ், ஸ்டார்ச் இரண்டுக்கும் கூட்டுத் தோற்றுவாயான பார்லி முளை விடும் போது தோன்றும் சிறு வேரிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது. பொதுவாக, முளைத்தல் நிகழ்வு நொதி அடக்கத்தைக் கூடுதலாக்குகிறது. இது நிகழும் போது, மற்றைய நொதிகள் வளர் ஊடகத்தில் தாமாகவே கலக்கின்றன. பெசிலஸ் சப்ட்டிலிசின் (Bacillus subtilis) எனும் அமைலேஸ் நொதி ஆழமான தொட்டிப் பண்ணையில் தயாரிக்கப் பட்டு, நீர்ம வடிவிலேயே துணிகளிலிருந்து மிகை கஞ்சியை அகற்றுவதற்குப் பயன் படுகிறது. சாறு இறக்கம் (extraction) எனும் உத்தி எளிய, சிக்கலற்ற வழி முறையாகத் தோன்றினாலும், நொதிகளைப் பிரித்தெடுப்பதற்கு முன்பாகச் செல்கள் திறக்கப் பட வேண்டும். செல் சவ்வுடன் நொதிகள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும் வாய்ப்புண்டு. மைடோ காண்ட்ரியா போன்ற ஒழுங்கு படுத்தப் பட்ட சிற்றுறுப்புகளிலும் (organelles) நொதிகள் தங்கி விடலாம். எனவே, சாறு இறக்குவதற்கு முன்போ, நிகழ்வின் போதோ, செல்கள் திறக்கப் பட்டு, நொதிகள் கரைய வல்லனவாக்கப் பட வேண்டும். பெரும்பாலும், இவ்வழி முறை தன்னிச்சையாகவே நிகழ்ந்து விடுகிறது. செல்கள் இறந்தவுடன், தன் முறிவு (antolytic) வகை நொதிகள் செல்லிலிருந்து வெளி வந்து, இதனைச் செய்து முடிக்கின்றன. டொலுயீனால் கொல்லப் பட்ட பெனிசீலியம் நொட்டேட்டம் (Penicillium notatum) எளிதில் தன் முறிவு அடைகிறது. மாறாக, சாக்கரோமைசேஸ் செரிவிசே (Saccharomyces cerevisial), அசெட்டேட் டினால் எளிதில் பிளாஸ்மாவாற் பகுப்பு (plasmolysis) அடைந்தாலும், செல்லை உடைப்பதற்கு மிகு நறுக்கு விசை தேவைப் படுகிறது. செல் பிளப்பைச் செயலாக்குவதற்கு, நொதி சேர்த்தல், செவி உணரா ஒலியைப் பயன் படுத்துதல், குண்டு ஆலையிடல் (ball milling), அரைத்தல், உறையச் செய்து மீண்டும் உருக்குதல் (freezing and thawing), நன்கு கலத்தல் ஆகிய முறைகள் பயன் படுகின்றன.\n\nநொதிக் கரைப்புக்குத் தன் முறிவினால் விளையும் செல்லுறை நொதிகளே உதவுகின்றன. மேற்பரப்புச் செயல், லைசோசைம் ஆகியவற்றைச் சேர்த்தல், நன்கு அழுத்தி, பின்பு அழுத்தத்தைத் திடீரென விலக்குதல், உறைந்த நிலையில் அரைத்தல் போன்ற உத்திகள் பயனாகின்றன. கரைத்த பின்பு வடிகட்டல் அல்லது எதிரோட்டச் சாறு இறக்கல் வாயிலாக நொதிகள் பிரித்துப் பெறப் படுகின்றன.\n\nதூய்மையாக்கலும், செறிவூட்டலும். பெரும்பாலும், தொழிலக நொதிகளுக்கு நீரியச் சாற்றைச் செறிவூட்டி நிலையாக்கினால் போதுமானது. தேவைப் படின், நீருடன் கலக்க வல்ல கரைப்பான்௧ளான அசெட்டோன், மெத்தனால், எத்தனால் ஆகியவற்றைச் சேர்த்து நொதிகளை வீழ் படிவாக்கலாம். கரைப்பான் விகிதமும், மதிப்பும் இம்முறையில் செம்மைக்கு வித்திடும் காரணிகளாகும். அசெட்டோன்–நீர் விகிதம் 0.5–1.5 வரம்பிலும், ஆல்கஹால்–நீர் விகிதம் 2.5–4 வரம்பிலும் அமைய வேண்டும். இக்கலவைகளில் பெருவாரியான நொதிகள் நிலைத்திருப்பதில்லையாதலால், அவை 0–10°C என்னும் தாழ் வெப்ப நிலை வரம்பில் வீழ் படிவாக்கப் படுகின்றன. கரைப்பானுடன் தொடர்புறும் கால இடைவெளி இயன்ற வரை குறைவாக இருத்தல் வேண்டும். பல முறைகளில், இந்நேரம் சில நிமிடங்களுக்கு மட்டும் நிகழ்த்தப் படுகிறது.\n\nவீழ் படிவான நொதியைத் தகட்டுச் சட்ட வடி கட்டியில், (plate and frame filter) வடி கட்டிப் பிரிக்க வேண்டும். வடி கட்டுதல் விரைவு படுத்துவதற்கு டையாட்டம் மண் சேர்க்கப் படலாம். உயர் விசை மைய விலக்கலாலும், இப்பிரிப்பை நிகழ்த்தலாம். கூடை வடிவ மைய விலக்கி (basket centrifuge) இத்துறையில் பெரிதும் துணையாகிறது.\n\nநொதி, வீழ் படிவு தாழ் வெப்ப நிலைகளில் (0–50°C)விரைவாக வெற்றிடத்தில் உலர்த்தப் படும். தயாரிக்கப்பட்ட நொதியை, ஆவியாகும் கரைப்பான் நன்கு உலரும் வரை, தாழ் வெப்ப நிலையில் வைத்திருக்க உதவுகிறது. உலர்ந்த நொதி பொடியாக்கப் பட்டு, மதிப்பிடப் பட்டு, தர நிர்ணயத்திற்குப் பின், பைகளில் நிரப்பப் படுகிறது.\n\nசூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு, தொழிற் சாலைகளில் கரிம–நீர்ம ஆவி பரவுவதால் தோன்றும் சிக்கல் பற்றிய ஒழுங்கு விதிகள், கரிம நீர்ம விலையேற்றம் ஆகியன நொதித் தயாரிப்பில் புதிய திருப்பங்களைத் தோற்றுவித்துள்ளன. நீர்ம அளவைப் பெருமளவு குறைக்கும் நோக்கத்துடன், நுண் வடிகட்டல் முறை பின்பற்றப் படுவதால், கரைப்பான் தேவையும் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. தற்போது, நொதிகள் நீர்ம வடிவில் தயாரிக்கப் படுவதால், கரைப்பான் தேவை ஏறக் குறையத் தவிர்க்கப் பட்டு விட்டது.\n\nசில நொதிகள் மிக உயர் நிலைத் தூய்மையாக்கலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். நொதிகள் புரதங்களாகையால், புரதங்களைத் தூய்மையாக்கும் உத்திகள் இங்கும் பயனாகின்றன. அம்மோனியம் சல்ஃபேட், மக்னீசியம் சல்ஃபேட் ஆகியவற்றால் வீழ் படிவாக்கல், குளிர் உலர்வு ஆகியன குறிப்பிடத் தக்க முறைகளாகும். அயனிப் பரிமாற்ற நாட்ட வகைப் பரப்புக் கவர்ச்சிப் பகுப்பு, மின் சார்பு இறுத்து வடித்தல் (electrodecantation), கூழ் வடி கட்டல் ஆகிய நுண்மை மிக்க உத்திகள் தற்போது வழக்கிலுள்ளன. விரும்பத் தகாத உடன் விளைவுகளைத் தவிர்க்க வேண்டியாயினும், தூய்மையாக்கல் நிகழ்த்தப் பட வேண்டும். எடுத்துக் காட்டாக, மியூகர் மிசை (Mucor michei) எனும் நுண்ணுயிர் மிகுந்த அளவில் லிப்பேஸ் எஸ்ட்டரேஸ் நொதியைத் தருவதுடன், அமில புரோட்டியேசையும் தருகிறது. லிப்பேசைக் குறைக்கா விடில், அது பாலாடைக் கட்டியில் நீராற் பகுப்பு நிகழ்த்தி, நெடியை உருவாக்கும். சூடு படுத்தியும், அமிலம் சேர்த்தும், லிப்பேசை மட்டும் செயலற்றதாகச் செய்யலாம். குளுகோஅமைலேசில் மாசுப் பொருளாக விளங்கும் டிரான்ஸ்குளுகோசிடேசை மலியக் நீரிலியைப் பயன் படுத்தி அகற்றலாம்.\n\nதயாரிக்கப் பட்ட நொதியை, நிலைத்ததாகச் செய்வதற்குப் பின் வரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப் படுகின்றன. அவை: PH மதிப்புத் திருத்தி; பாஸ்ஃபேட், சிட்ரேட், சில கரிம மற்றும் கனிம அமிலங்கள்; பாதுகாப்பான்கள்: நுண்ணுயிர் எதிரிகளான பென்சோயெட், சார்பேட்; மிகு ஊடழுத்தப் பொருள்: சோடியம் குளோரைடு, கிளிசரால், சார்பிட்டால், எத்திலீன் கிளைகால்; தனித்து ஒதுக்கும் பொருள்: EDTA, சிட்ரேட்; வினையூக்கி: கால்சியம், கோபால்ட் உப்பு; விளாவி: நீர், டையாட்டம் மண், லாக்ட்டோஸ், மரத் தூள், மானிட்டால், தயிர் நீர்மம். —மே.ரா.பாலசுப்ரமணியன் துணை நூல். Krik–Othmer Encyclopedia of Chemical Technology, vol.9, Third Edition, Wiley Interscience, 1980."}}