{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3znnrem/", "data": {"id": "p3znnrem", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3znnrem/", "kind": "article", "headword": "ஆர்கனாட்டுக்கள்", "romanization": "ārkaṉāṭṭukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.393721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்கனாட்டுக்கள் கிரேக்கப் புராண வீரர்கள்.", "body_ta": "ஆர்கனாட்டுக்கள் கிரேக்கப் புராண வீரர்கள். தலைவன் ஜேசனுடன் ஆர்கோ என்னும் கப்பலில் கருங்கடற் கரையில் பூதம் காத்துவந்த பொன் மயிர்த் தோலைத் தேடிச்சென்றனர். அங்கு அரசகுமாரி மீடியா தனது மந்திர சக்தியால் பூதத்தை உறங்கச் செய்தாள். ஜேசன் தோலைக் கைப்பற்றினான்; மீடியா அவனுடன் தெசாலி நாட்டுக்குச் சென்றாள்."}}