{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3q4g2dd/", "data": {"id": "p3q4g2dd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3q4g2dd/", "kind": "article", "headword": "சீதப் பை", "romanization": "cītap pai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.779685+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சீதம் நிறைந்த பை, சீதப் பை (mucocele) எனப்படும்.", "body_ta": "சீதம் நிறைந்த பை, சீதப் பை (mucocele) எனப்படும். இது, பெரும்பாலும் பித்த நீர்ப் பையையே பாதிக்கிறது. பித்த நீர் நாளம் நீண்ட காலமாக அடைபட்டுக் கிடந்தால், சீதம் நிறைந்து, பித்த நீர்ப் பை வீங்கி, பெரியதாகிக் காணப்படும். இதனால், நோயாளிக்கு மேல் வயிற்றில் வலியும், நலக் குறைவும் உண்டாகும். வீங்கிய பித்த நீர்ப் பையைக் கையால் தொட்டுப் பார்த்து அறியலாம். அரிதாகப் பையின் சுவரில் வளிமம் தேங்கி, வளியூதல் கொண்ட பித்த நீர்ப் பை அழற்சி உண்டாகிறது, இந்நிலை பெரும்பாலும் ஆண்களிலும், நீரிழிவு நோயாளிகளிலும் காணப்படும். நோய் முற்றி விட்டால் பித்த நீர்ப் பையை அகற்றுவதே சிறந்தது. —மு.கி, பழநியப்பன்"}}