{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nz743bd3/", "data": {"id": "nz743bd3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nz743bd3/", "kind": "article", "headword": "சூரியக் கடிகை", "romanization": "cūriyak kaṭikai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.969482+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதி காலத்தில் இந்துக்களும், கிரேக்கர்களும் சூரிய நேரத்தைக் காணப் பயன்படுத்திய கருவி சூரியக் கடிகை (sundial) ஆகும்.", "body_ta": "ஆதி காலத்தில் இந்துக்களும், கிரேக்கர்களும் சூரிய நேரத்தைக் காணப் பயன்படுத்திய கருவி சூரியக் கடிகை (sundial) ஆகும். தகுந்த முறையில் பதிய வைக்கப்பட்ட ஒரு கோலின் நிழல் ஒரு கிடை தளத்தின் மேல் விழும் போது, அத்தளத்தில் நிழல் காட்டும் அளவு அந்நேரத்தின் சூரிய நேரமாகும்.\n\nசூரியக் கடிகையின் அடிப்படைத் தத்துவம் பின் வருமாறு விளக்கப்படுகிறது. S, N தெற்கு வடக்குத் திசைக் கோட்டில் உள்ளது. O தட்டின் மையம் உச்சி வட்டத் தளத்தில் அவ்விடத்தின் அகலங்கான Φ அளவு, சாய்வான OA என்னும் ஒரு கோல் பதிக்கப் பட்டுள்ளது. எனவே, OA என்பது வான கோள வட துருவம் Pஐ நோக்கியுள்ளது. உச்சியைச் சூரியன் கடக்கும் சமயத்தில், கோலின் நிழல் ONஇன் மேல் விழும். சூரியன் உச்சி கடந்து Oa, Ob எனும் இடங்களுக்கு வரும் போது, கோலின் நிழல் வலஞ் சுழியாகச் சுழன்று வட்டத்தில் விழும்.\n\nZPOa = h = சூரியனின் நேரக் கோணம் {சூரியன் Oaஇல் உள்ள போது) சூரியன் Oaஇல் உள்ள போது OaP என்னும் நடு வரை விலக்க வட்டம் (declination circle) தொடு வானத்தை aஇல் வெட்டும் போது, சூரியன் Oaஇல் இருக்கும். கோலின் நிழல் Oaஇன் மேல் விழும். NOaஐ θ எனக் கொள்ளலாம். NPa எனும் செங்கோண முக்கோணத்தில் NPa = h ஆகும். ஆகவே Sin = tan θ Cot h எனும் தொடர்பு கிடைக்கிறது. இதை tanθ = SinΦ tan h என எழுதலாம். இதில் θ, Φ ஆகிய மதிப்புகள் தெரியுமாதலால், h இன் மதிப்பை எளிதாகக் கணிக்கலாம். இதுவே, சூரியக் கடிகையின் கொள்கையாகும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மேற்காணும் கொள்கையைப் பயன்படுத்தி h = 15°, 30° எனும் பொழுது, சூரியன் உச்சி கடந்து 1 மணி நேரம், 2 மணி நேரம்… என அளவிட இயலுகிறது. மணிப் பகுதிகளையும் துல்லியமாக அளந்தறிய இயலும். —எம். அரவாண்டி"}}