{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nysyuc58/", "data": {"id": "nysyuc58", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nysyuc58/", "kind": "article", "headword": "ஆர்கண்டி", "romanization": "ārkaṇṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.356077+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Organdy) மிக இலேசாகவும், கம்பி போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திறனும் உள்ள ஒருவகைத் துணி.", "body_ta": "(Organdy) மிக இலேசாகவும், கம்பி போன்ற விரைப்பான தன்மையும், ஒளி புகவிடும் திறனும் உள்ள ஒருவகைத் துணி. எல்லாத் துணிவகைகளிலும் இதுவே மெல்லியது. மேனாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற ஆடைகளின் விளிம்பில் இது வைத்துத் தைக்கப்படுகிறது. இதைப் பல நிறங்களில் சாயமேற்றியும், சித்திர வடிவங்களை அச்சடித்தும் விற்கிறார்கள். இதை மெர்சரித்து இதற்குப் பளபளப்பான தோற்றம் அளிப்பதும் உண்டு."}}