{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/npxs3wqd/", "data": {"id": "npxs3wqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/npxs3wqd/", "kind": "word", "headword": "தானியக்கம்", "romanization": "tāṉiyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:49.138656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒரு கோப்பு இருக்க வேண்டும். குறுவட்டு, இயக்ககத்தில் செருகப்பட்டவுடன், விண்டோஸ் இக்கோப்பினைத் தேடும். (அவ்வாறு தேடும்படி நாம் முன்பே விண்டோசுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்). அக்கோப்பு இருப்பின் அதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளின்படி விண்டோஸ் செயல்படும். பெரும்பாலும் கணினியின் நிலைவட்டில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை நிறுவுவதற்கான கட்டளையாக இருக்கும். ஒரு கேட்பொலிக் குறுவட்டினைச் செருகியவுடன் விண்டோஸ், பாடலைப் பாட வைக்கும் பயன்பாட்டை இயக்கி, குறு வடடிலுள்ள முதல் பாடலை தானாகவே பாட வைக்கும்", "needs_definition": false, "gloss_en": "AutoPlay", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 117"}, {"n": 2, "definition_ta": "செய் பொருளாக்கத்தின் எல்லாப் படிகளையும் தானே இயங்கும் எந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை. இது மனித முயற்சியை மிச்சப்படுத்தும் அமைவு ஆகும்", "needs_definition": false, "gloss_en": "automation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 67"}]}}