{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/npd5q8kz/", "data": {"id": "npd5q8kz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/npd5q8kz/", "kind": "article", "headword": "அசாவ் கடல்", "romanization": "acāv kaṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.731094+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.", "body_ta": "சோவியத் ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கடல் கருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.\n\nபரப்பு: சு.14,500 சதுரமைல். இதன் வடகிழக்குப் பகுதியில் டாகன்ராக் வளைகுடா இருக்கிறது. இங்கு டான் ஆறு கடலோடு கலக்கிறது. இக்கடலின் சராசரி ஆழம் சு.53அடி. கோடை காலத்தில் சிறு கப்பல்கள் இக்கடலிற் செல்ல முடியும்."}}