{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ncyna2ma/", "data": {"id": "ncyna2ma", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ncyna2ma/", "kind": "word", "headword": "அணுகு சலுகைகள்", "romanization": "aṇuku calukaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.424712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பிணையத்தில் அல்லது ஒரு கோப்பு வழங்கலில் சேமிக்கப்பட்டுள்ள தகவல் வளங்களைக் கையாள்வதற்கு ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள். வழங்கல் கணினியை அணுகுதல், ஒரு கோப்பகத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிடல், ஒரு கோப்பினைத் திறந்து பார்த்தல், அதனைப் பிறருக்கு அனுப்புதல், ஒரு கோப்பினை அல்லது கோப்பகத்தை உருவாக்குதல், திருத்தியமைத்தல், அழித்தல் போன்ற செயல்பாடுகள் இந்தச் சலுகைகளில் அடங்கும். முறைமை நிர்வாகி ஒரு பயனாளருக்கு இச்சலுகைகளை வழங்கலாம் அல்லது மறுக்கலாம். நிர்வாகிக்கு இத்தகைய உரிமை இருப்பதால் தகவல் பாதுகாக்கப்படுகிறது; இரகசியத் தகவலின் மறைதன்மை காப்பாற்றப்படுகிறது. வட்டிலுள்ள சேமிப்பிடங்கள் போன்ற வளங்களை முறைப்படி பிரித்தளிக்க முடிகிறது", "needs_definition": false, "gloss_en": "access privileges", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 40"}]}}