{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mz35jj49/", "data": {"id": "mz35jj49", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mz35jj49/", "kind": "article", "headword": "இலிம்போபோ ஆறு", "romanization": "ilimpōpō āṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.093981+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சிறப்பான ஆறாகும்.", "body_ta": "தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் சிறப்பான ஆறாகும். இதன் நீளம் ஏறத்தாழ 1770 கி.மீ. இந்த ஆறு தென் ஆப்பிரிக்க மேட்டு நிலங்களில் உற்பத்தியாகி, தென் ஆப்பிரிக்கக் குடியரரின் மாநிலங்களுள் ஒன்றான பிரான்சுவால் மாநிலத்தைப் போட்சுவானா (Botswana) விலிருந்தும் சிம்பாபுவே (Simbabwe) யிலிருந்தும் பிரிக்கிறது. பின்னர், மொசாம்பிக்கின் (Mozambique} குறுக்காகப் பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. இதனை முதலை (Crocodile) ஆறு என்றும் கூறுவர். இலிம்போபோ (Limpopo) ஆறு கோடைக் காலத்தில் சொட்டுச் சொட்டாக விழும் சிற்றாறாகவும், மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து இரைச்சலுடன் பாயும் ஆறாகவும் மாறுகிறது. ஓலி பாண்ட்சு ஆறு (Olifants River) இந்த ஆற்றின் முதன்மையான துணையாறாகும்.\n\nஇந்த ஆற்றின் முகத்துவாரத்தில் கி.பி. 1498–ஆம் ஆண்டில் வாசுகோடாகாமா என்னும் போர்ச்சு- கீசிய மாலுமி நங்கூரம் பாய்ச்சித் தங்கினார். இதற்கு அவர் இரியோ தோ எசுபிரிட்டு சாண்டோ (Rio do Espiritu Santo) என்று பெயரிட்டார். இதன் கீழ்ப் போக்கினை (Lower Course) புனித வின்செண்டு வொயிட்செட் எர்சுகின் (St. Vincent whiteshed Erskine, 1868–69) என்பார் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தார்.\n\nஇலிம்போபோ ஆற்றின் கீழ்ப்பகுதி செழுமையானது. எனவே, இப்பகுதியில் மக்கள் தொகையும் மிகுதி."}}