{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mv3gyjax/", "data": {"id": "mv3gyjax", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mv3gyjax/", "kind": "article", "headword": "அலாவுதீன் – கல்லறையும் கல்லூரியும்", "romanization": "alāvutīṉ – kallaṟaiyum kallūriyum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.522786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "டில்லி குதுப்மினார் பகுதியில் இவையிரண்டும் அமைந்துள்ளன.", "body_ta": "டில்லி குதுப்மினார் பகுதியில் இவையிரண்டும் அமைந்துள்ளன. இப்போது இவை அழிந்துபட்ட நிலையில் உள்ளன. குவ்வத் – உல் – இசுலாம் மசூதிக்குத் தென்மேற்கில் இவை உள்ளன. அலாவுதின் இங்கு கல்லூரி (மதரசா) ஒன்றைத் தொடங்கினார் என்றும், அதில் இசுலாமிய இறைமையியலும் திருமறைகளும் போதிக்கப்பட்டன என்றும் கூறப்படுகிறது. இக்கல்லூரி, அழிந்துபட்ட நிலையில் ‘ட’ வடிவில் காணப்படும் பலவித அறைகளைக் கொண்டுள்ளது. தெற்குப் பகுதியின் நடு அறையில் காணப்பெறும் கல்லறை அலாவுதீனின் கல்லறையாக இருக்கக்கூடும். கல்லறையும் கல்லூரியும் ஒருங்கே அமைய இந்தியாவில் கட்டப் பெற்ற முதல் கட்டடம் இதுதான் என்பர்."}}