{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mqbrgrnd/", "data": {"id": "mqbrgrnd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mqbrgrnd/", "kind": "article", "headword": "சுருளி", "romanization": "curuḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.095712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சுருளி (கணிதம்)", "body_ta": "சுருளி (கணிதம்)\n\nபொதுவாக, r = a₀θ + a₁θ + a₂θ + … + a என்ற கோணத் தொலைவு ஆய சமன்பாட்டைக் கொண்ட அதி இயல் வளைவு (transcendental curve) சுருள் (spital) எனப்படும். ஏதேனும் ஒரு புள்ளி ‘r’ ஆர வெக்டரும் (radius vector), ‘θ’ வெக்டர் கோணமும் குறிப்பிட்ட விதிக்குட்பட்டு, தொடர்ந்து கூடியோ, குறைந்தோ இருக்குமாறு ஒரு நிலையான துருவத்தைச் சுற்றி இயங்கும் பாதை (locus) சுருளி என்றும் வரையறுக்கலாம். ஆர்க்கிமிடீஸ் சுருளி, கார்னு சுருளி ஆகியவை சுருளியின் சில வகைகளாகும். —பங்கஜம் கணேசன்"}}