{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mc2kg4ns/", "data": {"id": "mc2kg4ns", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mc2kg4ns/", "kind": "word", "headword": "நால்வர் நான்மணி மாலை", "romanization": "nālvar nāṉmaṇi mālai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.187492+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயாசிரியர்கள் நால்வர் மீது பாடப்பட்ட நூல். நான்கு மணிகள் கோக்கப்பட்ட மாலை போல வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல்பா ஆகிய நான்கு பாக்கள் மாறிமாறி 10 பாடல்களாக அந்தாதித் தொடையமையப் பாடப்படுவதே நான்மணி மாலையாகும். இம்முறையில் இந் நூல் நால்வர் மீது பாடப்பட்டதனால் இப்பெயர் பெற்றது. இந்நூலால் நால்வரது தலை சிறந்த பெருமைகளையும், தேவார திருவாசகங்களின் ஒப்புயர்வற்ற மாண்பையும், தேற்றத் தெளிய அறிந்துகொள்ளலாம். இந்நூலை வடநூற் கடலும், தென்னூற் கடலும் நிலை கண்டுணர்ந்த சிவஞான முனிவர் தம் சடையில் சிரோரத்னம் போல் வைத்து முடிந்திருப்பார் என்ற ஒரு செய்தியும் கேட்கப்படுதால், இந் நூலின் பெருமை நன்கு விளங்கும். இந் நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமி ஆவார். காலம் கி.பி.17 ஆம் நாற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 524"}]}}