{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mbp8h69q/", "data": {"id": "mbp8h69q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mbp8h69q/", "kind": "article", "headword": "அல்காம்பிரா", "romanization": "alkāmpirā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:38.950751+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இசுபெயின் நாட்டில் கிரனடாவிலுள்ள அரண்; கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோட்டையும் தேவாலயமும் உடையது.", "body_ta": "இசுபெயின் நாட்டில் கிரனடாவிலுள்ள அரண்; கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் கோட்டையும் தேவாலயமும் உடையது. கிரனடா நகரத்தின் புறத்தே உள்ள குன்றிற்கருகில் தாரோ (Darro) ஆற்றுக்கு மேற்புறம் அல்காம்பிரா (Alhambra) கட்டப்பட்டுள்ளது. அல்காம்பிரா என்னும் அராபியச் சொல்லுக்குச் சிவப்பு அரண் என்பது பொருள். சிவப்பு நிறமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் அல்காம்பிரா எனப்பெயர் பெற்றது. மாளிகையைச் சுற்றியுள்ள சுவர்களின் மேல் கோபுரங்கள் உள்ளன. இதன் மேற்கே நகரைக் காக்கும்\n\nஅல்காம்பிரா - அரண்மனையின் ஒரு பகுதியிலுள்ள சிங்க மண்டபம் கோட்டை ஒன்றும் அதன் நடுவில் மூர்கள் வரித்த அரண்மனையும் உள்ளன. இந்த அரண்மனை பெருமளவில் அழிந்துபட்டதால் இங்கு அரசர் ஐந்தாம் சார்லசு அரண்மனையைக் கட்டியுள்ளார். இக்கோட்டையின் கிழக்குப்பக்கம் கட்டடங்கள் அழிந்துபட்ட நிலையில் உள்ளன. ஆனால் கோபுரத்தின் பகுதிகளும் நுழைவாயில்களும் சிதைந்த நிலையிலுள்ளன. இப்பகுதியிலும் ஒரு நகரைக் காக்கும் புறக்காவல் அரண் உள்ளது. மூர்களின் கலைக்குச் சிறப்பை ஊட்டுவனவாக இங்குள்ள மீன்குளக் கூடமும் சிங்கக் கூடமும் படியோடி லின்டராசா (Patiode Lindaraja)வும் குறிப்பிடத்தக்கன. இங்குள்ள நீர் ஊற்றும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களும் மூர்களின் கலைத் திறமையைக் காட்டுவன. சுவர்களில் குர் ஆன் வரிகள் அழகான செதுக்குச் சித்திரங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு 13 கோபுரங்கள் உள்ளன. அரசதூதர் மண்டபம் மிக்க அழகு வாய்ந்தது. இதன் பரப்பு 35 ஏக்கர். அரண்மனையின் கிழக்கில் உள்ள தேவாலயம் 16–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இத்தேவாலயம் முன்னரே இங்கிருந்த மகுதியை அழித்துக்கட்டப்பட்டது. கி.பி. 1590–இல் தீயால் எரிந்து போனதாலும் பிரெஞ்சுக் குடியேற்றத்தாலும் அல்காம்பிரா பெருமளவில் சிதைவுற்றது."}}