{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m9ejwhzj/", "data": {"id": "m9ejwhzj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m9ejwhzj/", "kind": "article", "headword": "இலாகி ஆண்டு", "romanization": "ilāki āṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.210894+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மொகலாயப் பேரரசர் அக்பரால் தொடங்கப்பட்டதாகும்.", "body_ta": "மொகலாயப் பேரரசர் அக்பரால் தொடங்கப்பட்டதாகும். தீன்–இலாகி என்னும் தெய்விக மதத்தை அக்பர் உருவாக்கிய பின்னர், இலாகி ஆண்டு செயற்படலாயிற்று, இசுலாமுடன் தொடர்பு கொண்ட இசிரா (Hejira) ஆண்டை நீக்குமுகத்தான் இப்புதிய ஆண்டைப் புகுத்தினார் என்பர். இவ்வாண்டு அக்பர் அரியணை ஏறிய ஆண்டான கி.பி. 1556, பிப்பிரவரி 14–ஆம் நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது. இலாகி ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பெற்றது. அதன் மாதங்களும் நாள்களும் பண்டைய ஈரானிய ஆண்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டனவாகும். இவ்வாண்டுமுறை அக்பர், சகாங்கீர் ஆகிய பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. சாசகான் இதனை மாற்றி மீண்டும் இசிரா ஆண்டையே நடைமுறைப்படுத்தினார்."}}