{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m8fssyq7/", "data": {"id": "m8fssyq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m8fssyq7/", "kind": "article", "headword": "அழகிய சொக்கநாதபிள்ளை", "romanization": "aḻakiya cokkanātapiḷḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.554930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர்.", "body_ta": "அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர். நெல்லைக் காந்தியம்மை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி முதலியவை பாடியவர். தம்மை ஆதரித்த முத்துசாமிப் பிள்ளைமீது 'காதல்' என்னும் நூல் பாடியிருக்கிறார். சிலேடை பாடுவதில் வல்லவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்."}}