{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m4phxw2h/", "data": {"id": "m4phxw2h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m4phxw2h/", "kind": "article", "headword": "ஆர்க்கன்சா", "romanization": "ārkkaṉcā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.209155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்க்கன்சா (Arkansas) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று.", "body_ta": "ஆர்க்கன்சா (Arkansas) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. இதன் நிலவளப் பெருமையால் இதற்கு அதிசயநாடு என்று பெயரிட்டுள்ளனர். இங்கு மரமடர்ந்த காடுகள் நிரம்ப உண்டு. அரிசி, பருத்தி முதலியவை முக்கியமான விளைபொருள்கள். பெட்ரோலியம் முக்கியமான தாதுப் பொருள். 1872 லிருந்து இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. பரப்பு: 52,675 ச. மைல். மக் : 19.09.511 (1950)."}}