{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksete8re/", "data": {"id": "ksete8re", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksete8re/", "kind": "article", "headword": "அழுத்தம்", "romanization": "aḻuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.794699+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழுத்தம் (Pressure) எல்லாத் திசைகளிலிருந்தும் ஒரே சீராய்த் தொழிற்படும் ஒருவகைத் தகைவு.", "body_ta": "அழுத்தம் (Pressure) எல்லாத் திசைகளிலிருந்தும் ஒரே சீராய்த் தொழிற்படும் ஒருவகைத் தகைவு. அலகு பரப்பில் தொழிற்படும் விசை அழுத்தம் எனப்படும். காற்றின் அழுத்தம் ஒரு திட்டமாகக் கொள்ளப் படுகிறது. ஒரு காற்று மண்டல அழுத்தம் என்பது சதுர அங்குலத்திற்குச் சுமார் 14.7 இராத்தல் உள்ள அழுத்தத்தைக் குறிக்கும். திருத்தமாக இது 0° வெப்ப நிலையில் 760 மி. மீ. நேர்க்குத்தான நீளமுள்ள ரசநிரையின் அழுத்தம். இவ்வழுத்தத்தைச் சுன்னமாகக் கொண்டு இதற்குக் குறைவான அழுத்தத்தைக் குறைக் குறியிட்டுக் குறிப்பதுண்டு. ஒரு மோட்டார் டயரின் அழுத்தம் 35 இராத்தல் (ச. அங். என்பது காற்று அழுத்தத்தின் மேல் 35 இராத்தல்) எனவே குறிக்கும். அழுத்தத்தின் மெட்ரிக் அலகு பார் (Bar) எனப்படும். இது ச. செ. மீ.க்கு 107 டைன் அழுத்தம். பொறியியலில் வழங்கும் அழுத்த அலகு ச. அங்குலத்திற்கு ஓர் இராத்தல்."}}