{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kjws4bcq/", "data": {"id": "kjws4bcq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kjws4bcq/", "kind": "article", "headword": "அசரத்பால் மசூதி", "romanization": "acaratpāl macūti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.870530+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியாவின் சம்மு–காசுமீர மாநிலத்தின் தலைநகரான சிரிநகரில் உள்ள ஒரு சிறப்பான வழிபாட்டு இடம்.", "body_ta": "இந்தியாவின் சம்மு–காசுமீர மாநிலத்தின் தலைநகரான சிரிநகரில் உள்ள ஒரு சிறப்பான வழிபாட்டு இடம். இங்குள்ள மசூதியில் நபிகள் நாயகத்தின் புனித தலைமுடிகளில் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் போன்ற சிறப்பான சமயங்களில் அது பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களுள் ஒருவரான சையது அப்துல்லா என்பாருக்கு இப்புனித நினைவுப் பொருள் கிட்டியது. அவர் மதீனாலில் உள்ள முத்தாவலி மசூதியில் புரவலர். கி.பி. 1634-ஆம் ஆண்டில் அவர் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். தக்காணத்தில் பீசப்பூரில் 23 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் மகன் சையது அமீது கி.பி. 1692-ஆம் ஆண்டில் தில்லி நகருக்கு வந்தார். அங்கு அவர் காசுமீர வணிகர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடமிகுந்த தலைமுடிச் சின்னத்தை அவ்வணிகர் தம்முடைய பொருளாகப் பெற்றுக் கொண்டார். அவர் காலப் போக்கில் இலாகூரில் இறந்து போனார். குவாசா மதனிசு (Khwaja Madanish) என்பார் அதைக் காசுமீரத்திற்குக் கொண்டு வந்தார் சில காலம் நவுசி பாந்த்சாகேப் மசூதியில் வைக்கப்பட்டிருந்த அந்த நினைவுச்சின்னம் அசரத்பால் மசூதிக்கு மாற்றப்பட்டது. இந்த அசரத்பால் மசூதியைக் கட்டியவர் பேரரசர் சாசகான் (Shah Jahan) ஆவார். இம்மசூதியின் கட்டிடக்கலை மொகலாயப் பாணியையும் காசுமீரத்துக் கட்டிடக்கலைப் பாணியையும் இணைத்துக் கட்டப்பட்டதாகும். சேக்கு முகமது அப்துல்லாவும் அவர் துணைவர்களும் தீவிரமாக முயன்று மதீனாவில் நபிகள் நாயகத்தின் மசூதியைப் போல இதனையும் கட்டி முடித்தனர்."}}