{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kfe2zw2v/", "data": {"id": "kfe2zw2v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kfe2zw2v/", "kind": "article", "headword": "ஆதாம் சிகரம்", "romanization": "ātām cikaram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.325804+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆதாம் சிகரம் இலங்கையில் கொழும்புக்கு 45 மைல் கிழக்கே 7,352 அடி உயரம் உள்ளது.", "body_ta": "ஆதாம் சிகரம் இலங்கையில் கொழும்புக்கு 45 மைல் கிழக்கே 7,352 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள பீடபூமியில் காணப்படும் காற்சுவடு பௌத்தர், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவராலும் தத்தம் தெய்வத்தினது என்று பாராட்டப்படுகிறது. இப்போது அது பௌத்தத் துறவிகள் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கான யாத்திரிகர் தரிசனத்துக்காகச் செல்கிறார்கள். பல வேளைகளில் வைகறையில் மேகத்தின்மீது காணப்படும் அதன் நிழல் அழகாயிருக்கும்."}}