{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/keufxtpk/", "data": {"id": "keufxtpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/keufxtpk/", "kind": "article", "headword": "இலவ்சாய் ஓவன்", "romanization": "ilavcāy ōvaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.111544+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த சமூகப்பணியாளர்.", "body_ta": "மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த சமூகப்பணியாளர். இவர் மிச்சிகனில் உள்ள சேம்சுடவுனில் பிறந்தார். இவர் குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதைக் கடுமையாக எதிர்த்தார்; மெதடிசுடுத் திருச்சபையாளராக (Methodist Minister) இருந்தார்; திருச்சபைப் பதவியை விட்டு விலகி, குழந்தைகளைத் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்துப் போராடி வந்த ஒரு குழுவிற்குத் துணை இயக்குநராகப் பதவியேற்றார். 1907–ஆம் ஆண்டில் இக்குழு தேசியக் குழந்தைத் தொழில் ஒழிப்பு அமைப்பு ஒன்றை நிறுவியது. அந்த அமைப்பின் பொதுச் செயலராக 1926–ஆம் ஆண்டுவரை இலவ்சாய் ஓவன் (Lovejoy, Owen R.) பணியாற்றி வந்தார். இவர் 1927–ஆம் ஆண்டு முதல் 1953–ஆம் ஆண்டு வரை நியூயார்க்கிலுள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் (Children Aid Society) செயலராகப் பணியாற்றினார். மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் அமெரிக்கச் சமூகப் பணியாளர்கள் சங்கத்தின் இரண்டாம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்."}}