{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k7tw5y83/", "data": {"id": "k7tw5y83", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k7tw5y83/", "kind": "article", "headword": "அல்–அசார் பல்கலைக் கழகம்", "romanization": "al–acār palkalaik kaḻakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:38.939128+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உலகில் உள்ள தொன்மையான பல்கலைக் கழகங்களுள் ஒன்று.", "body_ta": "உலகில் உள்ள தொன்மையான பல்கலைக் கழகங்களுள் ஒன்று. எகிப்தின் இன்றைய தலைநகரான கெய்ரோ நகரில் கி.பி. 970–ஆம் ஆண்டில் இது நிலை நாட்டப்பெற்றது. இசுலாமியக் கல்வியைக் கற்பிக்கும் தலையாய மையமாக இது கருதப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இறையியல், இசுலாமியச் சட்டம், அராபிய மொழியியல், வேளாண்மை மருத்துவம், பொறியியல், போன்ற பாடங்களை மாணவர்கள் கற்கிறார்கள் இப்பல்கலைக்கழகம் அரசாங்க ஆதரவுடன் நடைபெறுகின்றது."}}