{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k73u378e/", "data": {"id": "k73u378e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k73u378e/", "kind": "word", "headword": "மெய்ப்பாங்கு", "romanization": "meyppāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.067105+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்டெல் 80x86 குடும்ப நுண் செயலிகளில் செயல்படுத்தப்படும் இயக்கப்பாங்கு. மெய்ப்பாங்கு முறையில் செயலி யானது ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே இயக்க முடியும். 1 எம்பி நினைவகத்துக்கு மேல் அணுக முடியாது. ஆனால் முதன்மை நினைவகத்தையும், உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களையும் தாராளமாக அணுக முடியும். 8086 செயலியில் மெய்ப்பாங்கு மட்டுமே உண்டு. எம்எஸ் டாஸ் இயக்கமுறைமை மெய்ப்பாங்கில் மட்டுமே செயல்படும். இதற்கு மாறாக 80286 மற்றும் பிறகு வந்த நுண் செயலிகளில் பாதுகாக்கப்பட்ட பாங்கு (Protected Mode) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யமுடியும். விண்டோஸ் இயககமுறைமை போன்ற பல் பணி இயக்கமுறைமைகள் இதில் செயல்படும். இதற்குத் தேவையான நினைவக மேலாண்மை மற்றும் நினைவகப் பாதுகாப்பினை பாதுகாக்கப்பட்ட பாங்கு வழங்குகிறது.", "needs_definition": false, "gloss_en": "real mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1219"}]}}