{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k2dvnjwf/", "data": {"id": "k2dvnjwf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k2dvnjwf/", "kind": "word", "headword": "திரை அச்சு விசை", "romanization": "tirai accu vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.558576+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் பீசி மற்றும் ஒத்தியல்புக் கணினிகளின் விசைப்பலகைகளில் இருக்கும் ஒரு விசை. இவ்விசையை அழுத்தும்போது திரையில் தோற்றமளிக்கும் எழுத்துகளை அப்படியே அச்சுப்பொறிக்கு அனுப்பிவைக்கும். விண்டோஸ் இயக்க முறைமையில் இந்த விசையை அழுத்தினால் திரைத் தோற்றம் கிளிப்-போர்டில் பதியும். அதனை ஒரு வட்டுக் கோப்பாகச் சேமிக்கலாம். மாற்று (Alt) மற்றும் திரையச்சு (print screen) ஆகிய இரு விசைகளையும் சேர்த்து அழுத்தினால் இயக்கத்தில் இருக்கும் சாளரம் (Active Window) மட்டும் கிளிப் போர்டில் பதியும்.ஆப்பிள் கணினிகளில் ஒத்தியல்பு கருதி இவ்விசை வைக்கப்பட்டுள்ளது.", "needs_definition": false, "gloss_en": "print screen key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1159"}]}}