{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jycdf7s4/", "data": {"id": "jycdf7s4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jycdf7s4/", "kind": "article", "headword": "இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த", "romanization": "iḷamperuvaḻuti, kaṭaluḷ māynta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.200011+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சங்க காலப் புலவர்களுள் ஒரு பாடலால் உயர்ந்தோருள் இவரும் ஒருவர்; ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறப்பாடலைப் (182) பாடியவர்.", "body_ta": "சங்க காலப் புலவர்களுள் ஒரு பாடலால் உயர்ந்தோருள் இவரும் ஒருவர்; ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறப்பாடலைப் (182) பாடியவர். இவர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தகைமைக்குச் சிறந்த இலக்கிய வடிவம் கொடுத்துப் பாடியுள்ளார். இவர் பெயருடன் வழுதி என்ற பெயரும் சேர்ந்திருப்பதால் இவர் பாண்டியர் குடியினராக இருத்தல் வேண்டும்."}}