{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jxc5mqk4/", "data": {"id": "jxc5mqk4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jxc5mqk4/", "kind": "word", "headword": "ஏ-பிரிவு பிணையம்", "romanization": "ē-pirivu piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:03.065230+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "16, 777, 215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று எண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது", "needs_definition": false, "gloss_en": "Class A network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 255"}]}}