{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jw9upmvn/", "data": {"id": "jw9upmvn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jw9upmvn/", "kind": "article", "headword": "அரண்மனைச் சிறுவயல்", "romanization": "araṇmaṉaic ciṟuvayal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:37.671525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடி – சிவகங்கைச் சாலையிலுள்ள ஓரூர்.", "body_ta": "இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடி – சிவகங்கைச் சாலையிலுள்ள ஓரூர். இருப்புப்பாதை நிலையம் உள்ளது. சிறுவயல் குறுநிலமன்னரின் மாளிகை இங்குள்ளது. இது மருது பாண்டியர் இருந்த அரண்மனையாகும். எனவே இவ்வூரை அரண்மனைச் சிறுவயல் என்பர். மருதுபாண்டியர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையின் மன்னராக இருந்தவர்கள். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடித் தூக்குத் தண்டனை பெற்றவர்கள். சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் சிறுவயலைப் பட்டினமாக்கி, அதில் அரண்மனை கட்டிய செய்தியைக் கூறுகின்றன."}}