{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jpwz4374/", "data": {"id": "jpwz4374", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jpwz4374/", "kind": "word", "headword": "மெய்ம்மைக் கொள்கை", "romanization": "meymmaik koḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:36.840402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெய்யறிவுக் கொள்கை மேனாட்டு அளவை இயலில் மெய்ம்மை பற்றி 3 கொள்கைகள் நிலவுகின்றன.அவையாவன 1) தொடர்புக் கொள்கை, நம் நுகர்வில் உள்ள பொருள்களுக்கு நேர் இணையான பொருள்கள் உளவா எனச் சரிபார்ப்பதைச் சார்ந்தது. 2) இணைவுக் கொள்கை நுகர்வில் பெறப்படுபவை தம்முள் ஒருங்கியைந்திருத்தல். 3) நடைமுறைக் கொள்கை; இது பயன் வழிக் கொள்கை. பேரா. எஸ். எஸ். சூரிய நாராயண சாத்திரியார் சைவசித்தாந்தத்தில் மெய்ம்மை என்னுந்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சைவ சித்தாந்தம் இணைவுக் கொள்கையைப் பின்பற்றுவதாக அவர் கருதுகிறார். அனைத்தையும் சேர்க்கும் முறையில் ஒன்றையும் விடாது உள்ளீடாகக் கொள்வதில் சாருவாக தரிசனத்தையும் சித்தாந்தம் ஏற்பதையும் அவர் குறிப்பிடுகின்றார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 235"}]}}