{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jmh873as/", "data": {"id": "jmh873as", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jmh873as/", "kind": "article", "headword": "ஆல்ட்டாய் மலைகள்", "romanization": "ālṭṭāy malaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.248711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மேற்கு மங்கோலியாவிற்கும் காஜாக் குடியரசிற்கும் வட மேற்கேயுள்ள ஒரு மலைத்தொடர்.", "body_ta": "மேற்கு மங்கோலியாவிற்கும் காஜாக் குடியரசிற்கும் வட மேற்கேயுள்ள ஒரு மலைத்தொடர். ஆசியாவிலுள்ள மிகப் பழைய மலைகளிற் சில இங்கிருக்கின்றன. இம்மலைகளில் ஈயம், நாகம், தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு முதலியன கிடைக்கின்றன. இம்மலைகளில் உயர்ந்த உச்சி பெலூக்கா என்பது (14,896 அடி). ஆப் ஆறு இங்குத் தான் உற்பத்தியாகிறது."}}