{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jjew4xdy/", "data": {"id": "jjew4xdy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jjew4xdy/", "kind": "article", "headword": "நேர் மின்னோட்டம்", "romanization": "nēr miṉṉōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.730224+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு மின் சுற்றில் அல்லது மின் கருவியில் ஒரே திசையில் பாயும் மின்னோட்டம் நேர் திசை மின்னோட்டம் (direct current) எனப் படும்.", "body_ta": "ஒரு மின் சுற்றில் அல்லது மின் கருவியில் ஒரே திசையில் பாயும் மின்னோட்டம் நேர் திசை மின்னோட்டம் (direct current) எனப் படும். மாறு திசை மின்னோட்டத்தில் நேர், எதிர் முனைகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், நேர் மின்னோட்டத்தில் மின் முனைகள் மாறா. நேர் திசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தின் அளவு மாறாமல் இருக்கும்.\n\nமின் கலங்களும், மின்னியற்றிகளும் மாறா அளவு நேர் மின்னழுத்தத்தை தருகின்றன. நேரத்திற்கு ஏற்ப, மாறுபடும் அளவுள்ள நேர் திசை மின்னோட்டத்தை மின் திருத்திகள் (rectifiers) கொடுக்கின்றன. நேர் திசை மின்னோட்டம் தொழில் சாலைகளில் விரைவு மின்னோடிகளை இயக்கவும், போக்குவரத்துத் துறையிலும் பயன் படுகிறது. மின் வேதியியல் நிகழ்வுகளுக்கும், மின் முலாம் பூசுவதற்கும், வேதிப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், மிகு திறனுள்ள நேர் மின்னோட்டம் பயன் படுகிறது. நேர் மின்னோட்டத்தைப் பயன் படுத்துவோருக்கு ஏற்றவாறு பங்கிட்டு வழங்க இயலாமையால், மாறு திசை மினனனோட்டத்தைத் திருத்திகளின் உதவியால், நேர் மின்னோட்டமாக மாற்றிப் பயன் படுத்தலாம். தற்போது உலகெங்கிலும் உயர் அழுத்த நேர் மின்னோட்டம் பரப்பும் அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. —பெ. துரைசாமி"}}