{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jgeg66y7/", "data": {"id": "jgeg66y7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jgeg66y7/", "kind": "article", "headword": "நுண் குமிழ்க் கண் சவ்வழற்சி", "romanization": "nuṇ kumiḻk kaṇ cavvaḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.590565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இமை இணைச் சவ்வின் ஒவ்வாமை அழற்சியின் போது, உள்ளார்ந்த ஒரு நச்சின் விளைவால், இந்த அழற்சி (phyetenular conjunctivitis) உண்டாகிறது.", "body_ta": "இமை இணைச் சவ்வின் ஒவ்வாமை அழற்சியின் போது, உள்ளார்ந்த ஒரு நச்சின் விளைவால், இந்த அழற்சி (phyetenular conjunctivitis) உண்டாகிறது. காச நோய் நச்சு விளைவு மீண்டும் ஏற்படும் போது, வலிமையற்ற குழந்தைகளில் இந்நோய் தோன்றுகிறது. இங்கிலாந்தில், காச நோய் மறைந்து விட்ட போதிலும் மீண்டும் இந்நோய் தோன்றுவதால், இந்நோய் ஸ்டெஃபை லோகாக்கை நுண்ணுயிரால் வரும் இமை இணைச் சவ்வழற்சியாக இருக்கும் எனக் கருதப் படுகிறது.\n\nஇமை இணைச் சவ்விற்கு அடியிலோ, பளிங்குப் படலப் புறச் செல்லுக்கு அடியிலோ, வெள்ளணுக்களின் ஊடுருவல்தான் இந்நோயின் சிறப்பாகும். ஃபிளக்டீன்களில் நிண அணுக்களைச் சுற்றிலும் இமை இணைச் சவ்வில் குருதித் திரட்சி ஏற்பட்டு, விரைவிலேயே புண்ணாகி, நாளடைவில் நார்ப் பொருளுடன் சீரடையும். பளிங்குப் படலத்தில் தழும்புகள் உண்டாகின்றன. இதனால், பார்வை பாதிக்கப் படுகிறது. மருத்துவமாக ஸ்டீராய்டு களிம்பு, காச நோய் இருந்தால், காச நோய் எதிர் மருந்து பயனளிக்கும். —மு.ப. கிருஷ்ணன்"}}