{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jesnzs3m/", "data": {"id": "jesnzs3m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jesnzs3m/", "kind": "word", "headword": "இயங்குநிலைத் திறவிகள்", "romanization": "iyaṅkunilait tiṟavikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.017668+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிணையம் அல்லது இணையத்தில் தரவு மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப்படுவதுண்டு. மறுமுனையில் மறைவிலக்கம் செய்யப்பட்டு மூலத்தரவு பெறப்படும். இவ்வாறு மறையாக்கம், மறைவிலக்கம் செய்ய திறவிகள் (Keys) பயன்படுகின்றன. ஒரு பயனாளரின் தனித்திறவி (Private key) மூலம் மறையாக்கம் செய்யப்பட்ட தரவு அவருக்குரிய பொதுத்திறவி மூலம் மறைவிலக்கம் செய்யப்படுகிறது. தகவலை அனுப்பும்போது ஒவ்வொரு அனுப்புகையும் வெவ்வேறு திறவி களால் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப் படலாம். மறுமுனையில் ஒருமுறை மறைவிலக்கத்துக்குப் பயன்படுத்திய திறவியை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த நுட்பம், தகவலின் பாதுகாப்பினை அதிகரிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "dynamic keys", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிகழ்நேர மறைக்குறிகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 498"}]}}