{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/je86t9u8/", "data": {"id": "je86t9u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/je86t9u8/", "kind": "article", "headword": "சார்பு மூலக்கூறு எடை", "romanization": "cārpu mūlakkūṟu eṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:53.236376+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சார்பு மூலக்கூறு எடை ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களில் நிறைகளின் மொத்தக் கூட்டுத் தொகை, மூலக்கூறு எடை எனப்- படும்.", "body_ta": "சார்பு மூலக்கூறு எடை ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களில் நிறைகளின் மொத்தக் கூட்டுத் தொகை, மூலக்கூறு எடை எனப்- படும். தற்காலத்தில் மூலக்கூறு எடை என்ற கருத்துக்கு மாறாகச் சார்பு மூலக்கூறு நிறை (relative molecular mass) என்னும் கருத்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஓர் இயற்கையான நூக்ளைடு கூட்டமைப்பில் ஒரு மூலக்கூறின் நிறைக்கும், கார்பன்—12 நூக்ளைடு நிறையின் 12இல் ஒரு பங்கு நிறைக்கும் உள்ள தகவு சார்பு மூலக் கூறு நிறை ஆகும். காட்டாக, பொட்டாசியம் குளோரைடின் (KCI) சார்பு மூலக்கூறு நிறை 74.555 ஆகும். —கே. என். ராமச்சந்திரன்"}}