{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jchun28s/", "data": {"id": "jchun28s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jchun28s/", "kind": "word", "headword": "வணிக வழங்கன்", "romanization": "vaṇika vaḻaṅkaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:06.465762+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில் தரவு மாற்றம் செய்யப்படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்துகின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங்களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத் தளத்தில் காட்டப்படுகின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட், குவார்ட்டர்டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக அநேக கம்பெனிகள் வணிக வழங்கன்களை விற்பனை செய்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "commerce server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வணிகப் சேவையகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 284"}]}}