{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j9w95swx/", "data": {"id": "j9w95swx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j9w95swx/", "kind": "article", "headword": "ஆப்பியன் பாதை", "romanization": "āppiyaṉ pātai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.682033+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆப்பியன் பாதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் பண்டைய ரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற சாலை.", "body_ta": "ஆப்பியன் பாதை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் பண்டைய ரோமாபுரியிலிருந்த ஒரு புகழ்பெற்ற சாலை. ஆப்பியஸ் என்னும் அதிகாரி அமைத்ததால் அப்பெயர் பெற்றது. அதில் சில பகுதிகள் இப்போதும் பயன்பட்டு வருகின்றன. அதன் அருகில் பூமிக்கு அடியில் கிறிஸ்தவர் அமைத்த கல்லறைகள் உள."}}