{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j427njn7/", "data": {"id": "j427njn7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j427njn7/", "kind": "word", "headword": "சிபிடீ", "romanization": "cipiṭī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:59.458716+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை. இம்முறையில் உரைக் கோவை மட்டுமின்றி, வண்ண மிக்க வரைகலைப்படங்கள், அசைவூட்டப் படங்கள் மற்றும் குரல் மூலமான விளக்கங்கள் உட்பட பயனாளரை ஈர்க்கும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்த எளிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் தன் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்கு அம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளையே ஒரு சிபிடீயாகத் தயாரிக்க முடியும். ஒரு மேலாண்மைத்துறைக் கருத்தரங்கில் சிபிடீ-யை ஒரு சிறந்த கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "CBT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}