{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hyat8ssr/", "data": {"id": "hyat8ssr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hyat8ssr/", "kind": "article", "headword": "நுண்ணளவி", "romanization": "nuṇṇaḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.699677+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திண்மப் பொருள்களின் தொலைவு, தடிமன், விட்டம், கோணம் போன்றவற்றை அளக்கப் பயன்படும் ஒரு துல்லிய கருவியே நுண்ணளவி (micrometer) எனப் படும்.", "body_ta": "திண்மப் பொருள்களின் தொலைவு, தடிமன், விட்டம், கோணம் போன்றவற்றை அளக்கப் பயன்படும் ஒரு துல்லிய கருவியே நுண்ணளவி (micrometer) எனப் படும்.\n\nநிலை முனை (anvil), சுழல் அச்சு (spindle), நழுவு திருகி (ratchet). நழுவு குமிழ் (ratchet knob), வெர்னியர், விரல் முனைப் பூண் (thimble), அளவு கோல். உறை, உறை அளவு கோல், சட்டம், பூட்டு மரை (lock nut) ஆகியவை நுண்ணளவியின் உறுப்புகள் ஆகும். சுழல் அச்சுக்கு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தைக் கொடுக்க நழுவு திருகி பயன் படும். அளவுகளை அளந்து முடிந்தவுடன், சுழல் அச்சினை அதன் இயல்பு நிலையில் இருக்கச் செய்யப் பூட்டு மரை பயன் படும்.\n\nஇயக்கம். நுண்ணளவியின் சட்டம் C வடிவில் காணப் படும். உறையின் ஒரு முனையில் விரல் முனை பூண் காணப் படும். விரல் முனைப் பூண் அளவு கோல் தலைப் பகுதி அளவு கோல் (head scale) என்றும், உறை அளவு கோல் புரியிடை அளவு கோல் (pitch scale) என்றும் வழங்கப் படுகின்றன. தலைப் பகுதியின் சுற்று வரை சம பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும். உறை அளவு கோல் மி.மீட்டரில் அளவீடு செய்யப் பட்டிருக்கும். இதன் மேல் விரல் முனைப் பூண் நகரும்.\n\nஅளக்க வேண்டிய பொருளை நிலை முனைக்கும், சுழல் அச்சுக்கும் இடையில் வைக்க வேண்டும். நிலை முனை, சுழல் அச்சு ஆகியவற்றின் முனைகள் சம மட்டமாகவும், (plane) நுண்ணளவியின் அச்சுக்குச் செங்குத்தாகவும் இருக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அளக்க வேண்டிய பொருளுடன் சுழல் அச்சு தொடர்பு கொள்ளும் வரை விரல் முனைப் பூண் அல்லது நழுவு திருகை சுற்ற வேண்டும். உறையின் மேலுள்ள 1 எனும் எண், 0.1”ஐச் சுட்டும். உறையின் ஒவ்வொரு 0.25”க்கும் விரல் முனைப் பூண் ஒரு முழுச் சுற்றை உண்டாக்கும். விரல் முனைப் பூணில் 25 பிரிவுகள் உள்ளமையால், ஏறக் குறைய 0.001” வரை அளக்கலாம்.\n\nகுறிப்பிட்ட அளவு நழுவு திருகியைச் சுற்றினால், புரியிடைத் தொலைவின் பின்னத்திற்கு விகிதாசாரமாக உள்ள ஒரு தொலைவிற்குச் சுழல் அச்சுத் தண்டு நகரும். எ.டு: புரியிடை 0.5 மி.மீ. எனவும், தலைப் பகுதி ஐம்பதுகளாகவும் (divisions) இருப்பின், ஒவ்வோர் அளவு கோல் பகுதியும் 0.01 மி.மீ. நகர்விற்குச் சமமாகும்.\n\nவெளிப்புற நுண்ணளவி (outside micrometer). பெரிய நுண்ணளவி (large micrometer), உட்புற நுண்ணளவி (inside micrometer), ஆழ நுண்ணளவி (depth micrometer), புரி நுண்ணளவி என நுண்ணளவிகள் பல வகைப்படும்.\n\nவெளிப்புற நுண்ணளவி. இது நுண்ணளவி இடுக்களவி (micrometer caliper) என்றும் வழங்கப் படுகிறது. இது வெளிப் புற விட்டங்களையும், தடிமன்களையும் அளக்கப் பயன் படுகிறது. இந்நுண்ணளவி 25 மி.மீ., 25–50 மி.மீ. போன்ற அளவுகளை அளக்கப் பயன் படுகிறது. இது பல அளவுகளில் கிடைக்கிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் / ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.----> பெரிய நுண்ணளவி. இது 25 மி.மீட்டருக்குக் குறைந்த அளவுக்கு அளக்கப் பயன் படுகிறது. மேலும் நுண்ணளவியில் அளக்க வேண்டிய அளவிற்கேற்பத் தகுந்த நிலை முனையைப் பொருத்தி, 225 மி.மீ. முதல் 300 மி.மீ. வரை அளக்கலாம்.\n\nஉட்புற நுண்ணளவி. இது உட்பிற விட்டங்கள், இணைப் பரப்புகள் அல்லது பிற உட்புற அளவுகளை (dimensions) அளக்கப் பயன் படுகிறது. படம் 4இல் உள்ள அளவியைக் கொண்டு 5–25 மி.மீ. வரை அளக்கலாம்.\n\nபடம் 5–இல் உள்ள குழாய் வடிவ (tubular) உட்புற நுண்ணளவியைக் கொண்டு, 40–300 மி.மீ. வரை 13 மி.மீ. கூடுதல் அளவுகளில் (increments) அளக்கலாம். இந்நுண்ணளவியின் இரு பகுதிகளிலும், அளக்குந் தண்டுகளை இணைத்து, இதன் அளக்குந் திறனை (range) அதிகரிக்கலாம்.\n\nசிறு துளைகளின் விட்டங்களைத் துல்லியமாக அளக்க மைக் துளை கடிகை (mikeholegage) பயன் படுகிறது. இது 6–200 மி.மீ. அளவுகளில் கிடைக்கிறது. உட்புற நுண்ணளவிகளை ஆயவும், பொருத்தவும் (set) பொருத்து வளையங்கள் (setting rings) இதில் பயன் படுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஆழ நுண்ணளவி. வரி ப்பள்ளங்கள், துளைகள் ஆகியவற்றின் ஆழத்தை அளக்க இது பயன் படுகிறது. பரிமாற்று அளக்குந் தண்டுகளைப் (interchangeable measuring rods) பயன் படுத்தி, இந்நுண்ணளவியின் வீச்சு எல்லையை உயர்த்தலாம்.\n\nபுரி நுண்ணளவி. திருகு புரிகளின் புரியிடை விட்டத்தை அளக்க இது பயன் படுகிறது.\n\nதற்கால நுண்ணளவிகள். ஒப்புமையாக்கியாகப் (compartor) பயன் படும் சுட்டு நுண்ணளவி (indicating micrometer), நேரடிக் காட்சிப் பதிவு நுண்ணளவி (direct reading micrometer), இரு காட்சிப் பதிவு நுண்ணளவி (dual reading micrometer), அளவுகளை எண் வடிவில் காட்டும் மின்னணுவியல் நுண்ணளவி (electronic micrometer) ஆகியவை தற்காலத்தில் புதிதாக வடிவமைக்கப் பட்ட நுண்ணளவிகள் ஆகும். —இரா.இந்து"}}