{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hsd8m9jf/", "data": {"id": "hsd8m9jf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hsd8m9jf/", "kind": "article", "headword": "இலாகுல்-இசுபிட்டி", "romanization": "ilākul-icupiṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.236294+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலாகுல்-இசுபிட்டி என்பது இமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும்.", "body_ta": "இலாகுல்-இசுபிட்டி என்பது இமாசலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். அம்மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்களில் இலாகுல்–இசுபிட்டி (Lahaul & Spiti) மாவட்டமே பரப்பளவில் பெரியது. இது இமாசலப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்கில் சீனாவின் பகுதியான திபெத்து அமைந்துள்ளது. வடக்கில் சம்மு-காசுமீர மாநிலம் இதன் எல்லைபோல் உள்ளது.\n\nஇலாகுல்–இசுபிட்டியின் பரப்பளவு 13,835 ச.கி.மீ; மக்கள் தொகை 32,100 (1981). இம்மாவட்டம் முழுவதும் இமயமலையின் பகுதியாக அமைந்துள்ளது. இங்குப் பனியாறுகளும் பனி மூடிய வயல்களும் உள்ளன. இங்குள்ள மலையுச்சிகள் பல 6,000 மீ. உயரத்தைத் தாண்டியவை. தாழ்ந்த பள்ளத்தாக்குகளில் பார்லி விளைகிறது. இங்குப் பல புத்தசமய மடாலயங்கள் உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகரம் கேலாங்கு (Keylong) என்பதாகும்"}}