{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqa2bvgt/", "data": {"id": "hqa2bvgt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqa2bvgt/", "kind": "article", "headword": "இலோயிலோ", "romanization": "ilōyilō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.708627+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலோயிலோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் தலையாய துறைமுகங்களுள் ஒன்று.", "body_ta": "இலோயிலோ என்பது பிலிப்பைன்சு நாட்டின் தலையாய துறைமுகங்களுள் ஒன்று. இந்நகரம் பனாய்த்தீவின் (Panay Island) தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இலோயிலோ (Iloilo) மணிலாவிற்கு ஏறத்தாழ 470 கி.மீ தெற்கில் உள்ளது. இதன் குறுக்காக இலோயிலோ ஆறு பாய்வதால் இங்குள்ள துறைமுகம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் அண்மையிலுள்ள நீக்கிரோசுத் தீவிற்கு (Negros Island) இந்நகரின் துறைமுகமே ஏற்றுமதி இறக்குமதிக்குப் பெரிதும் பயன்படுகிறது. பட்டு நூலினாலும் அன்னாசி இலைகளாலும் பின்னப்பட்ட கைத்தறி ஆடைகளுக்கு இலோயிலோ பெயர் பெற்றது. இவ்வாடைகள் மென்மையானவை. இந்நகரின் மக்கள்தொகை 2,44,827 (1980).\n\nபிலிப்பைன்சு நாட்டின் மாநிலம் ஒன்றின் பெயரும் இலோயிலோ என்பதே இதன் தலைநகரம் இலோயிலோ நகரமாகும்."}}