{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h3rwdz7s/", "data": {"id": "h3rwdz7s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h3rwdz7s/", "kind": "article", "headword": "நெல்சன் நோயியம்", "romanization": "nelcaṉ nōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.400565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குரோமோபோப் (Chromophobe) செல்களே மிகையாகச் சுரந்தால், குஷிங் நோய் உண்டாகிறது.", "body_ta": "குரோமோபோப் (Chromophobe) செல்களே மிகையாகச் சுரந்தால், குஷிங் நோய் உண்டாகிறது. சிறுநீரகத்தின் மேல் இரு புறமும் இருக்கும் அட்ரினல் சுரப்பிகளை (adrenal glands) அறுவை மூலம் அகற்றி விடுவதே மருத்துவமாக அமைகிறது. அறுவைக்குப் பின், பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிறமிகளின் மிகையான மாற்றங்களும் மிகத் தீவிரமான பிட்யூட்டரி கட்டியும் தோன்றி, விரைவாகப் பரவும். இந்நிலையே, நெல்சன் நோயியம் எனப் படுகிறது. இந்நோய் நிலையில் தோன்றும் சுரப்பிக் கட்டி, பிட்யூட்டரி குழிவை விரிவடையச் செய்து, பார்வை நரம்புகளின் குறுக்கீடுகளை நசுக்குகிறது. —அ. கதிரேசன் துணை நூல். D.H. Williams, Tex tbook of Endocrinology, W.B. Saunders, Philadelphia, 1981."}}