{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/h3qmcrne/", "data": {"id": "h3qmcrne", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h3qmcrne/", "kind": "article", "headword": "அசிட்டினிலைடு", "romanization": "aciṭṭiṉilaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.742106+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acetanilide): [குறியீடு C6H5NH.", "body_ta": "(Acetanilide): [குறியீடு C6H5NH. CO. CH3] படிக அசிட்டிக அமிலத்துடன் அனிலீனை வினைப்படுத்தி இதை பெறலாம். இது 115-ல் உருகும் வெண்மையான படிகப் பொருள்; இது தண்ணீர், சாராயம் முதலியவற்றில் கரைய வல்லது. இது தலைவலி, காய்ச்சல் முதலிய கோளாறுகளைத் தற்காலிகமாக நீக்கப் பயன்படுகிறது."}}