{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gzar5n29/", "data": {"id": "gzar5n29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gzar5n29/", "kind": "article", "headword": "அல்லாப் பிச்சைப் புலவர்", "romanization": "allāp piccaip pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.260632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பாண்டிய நாட்டுக் குலசேகரன் பட்டினத்தில் சர்க்கரைச் சாயபுத்தம்பி என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.", "body_ta": "பாண்டிய நாட்டுக் குலசேகரன் பட்டினத்தில் சர்க்கரைச் சாயபுத்தம்பி என்பாருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; இசுலாமியப் பற்று மிக்கவர், ‘சுகபுல்லீமானென்று வழங்கா நின்ற ஈமானுடைய பயன்கள்’, ‘சைகு தாவுது ஒலியுல்லா பேரில் பாடல்கள்’, ‘அசரத் சையிது குத்பு சாகுல் அமீது மீறான் சுல்தான் காதிறு கன்இசவாய் சாகிபு ஆண்டவர் அவர்கள் பேரில் பாடல்கள்’ முதலியன இவர் இயற்றியவை. ஐதுறூசு நயினார்ப் புலவர் பாடிய ‘நவமணிமாலை’ என்னும் முகியதீன் புராண நூலைப் பாராட்டிச் சிறப்புப்பாயிரம் செய்துள்ளார். இரட்டையாசிரிய விருத்தத்தால் அமைந்த இச்சிறப்புப் பாயிரத்தின் துணையால் ஐதுறூசு நயினார்ப் புலவரின் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளலாம்.மு.த."}}