{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/grr92mau/", "data": {"id": "grr92mau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/grr92mau/", "kind": "article", "headword": "இசை நுணுக்கம்", "romanization": "icai nuṇukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.332161+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவனுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர்.", "body_ta": "ஓர் இசை இலக்கண நூல். இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவனுக்கு இசை யறிவிக்க, அகத்தியர் மாணவர்களிற் சிகண்டியார் என்பவர் இயற்றிய நூல் என்பர். இஃது இடைச்சங்க காலத்தது என்று அடியார்க்கு நல்லாருரையாலும், இடைச்சங்கப் புலவர்க்கு நூலாயிருந்ததென இறையனார் அகப்பொருளுரையாலும் அறியலாம். அகத்திய முனிவர் மாணவர் என்று இக் காலத்து வழங்கும் பெயர்களில் சிகண்டியார் பெயர் இல்லை."}}