{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ghjszjye/", "data": {"id": "ghjszjye", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ghjszjye/", "kind": "article", "headword": "அஜாய்கர்", "romanization": "ajāykar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.624764+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஜாய்கர் விந்தியப் பிரதேசத்தில் கேதார பருவதத்தின் மேல் உள்ள நகரம்.", "body_ta": "அஜாய்கர் விந்தியப் பிரதேசத்தில் கேதார பருவதத்தின் மேல் உள்ள நகரம். இதே பெயருள்ள சமஸ்தானம் இந்த இராச்சியத்துடன் இணையுமுன் இது அதன் தலைநகராக இருந்தது. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற வரலாற்றுப் புகழுள்ள கோட்டையொன்று உடையது. இதில் கட்டடச் சிற்ப அழகுள்ள சமணக்கோயில்கள் உள்ளன."}}