{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gh64zjxb/", "data": {"id": "gh64zjxb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gh64zjxb/", "kind": "word", "headword": "அத்துவிதக்கொள்கைகள்", "romanization": "attuvitakkoḷkaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:58.111898+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அத்துவித விளக்கத் தொடர்பாக இவை எழுந்தவை. வகை மூன்று. 1. அபேத வாதம்: வேறன்மைக் கொள்கை. \"இறைவனும் உயிர்களும் பொன்னும் பணியும் (அணிகலன்) போல ஒன்றே; வேறல்ல” என்பர் ஏகான்மவாதிகள். இதற்கு மறுப்பாக 'உடலில் உயிர் போல’ என்று மெய்கண்டார் கூறுகின்றார். 2. பேத வாதம்; வேறு என்னுங் கொள்கை “உயிரும் இருளும் ஒளியும் போல் உள்ளார்கள்” என்பர் பேதவாதிகள். உயிரும் இறைவனும் வேறுவேறு பொருள் ஆவதற்குச் சைவ சித்தாந் தத்தில் கண்ணொளியும் கதிரவன் ஒளியும் உவ மையாகக் கூறப்பெறும். 3. பேதா பேதவாதம்: வேற்றுமையில் ஒற்றுமை. “உயிரும் இறைவனும் ஒன்றுதான்; வேறுதான்” என்பர் பேதா பேதவாதிகள். பேதம், அபேதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட தன்மைகள். அவை ஓரிடத்து ஒருங்கு நில்லா. அவ்வாறே இறைவன் உயிர் என்னும் இரண்டிடத்தும் ஆகும். அதனால் பேதாபேதம் என்பது பொருளற்றதாகிறது. சிவஞானபோதத்தில் நூற்பா, 2, 5, 11 ஆகியவற்றால் அத்து விதம் முழுமையாக விளக்கம் பெறுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 19"}]}}